MARC காட்சி

Back
எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில்
245 : _ _ |a எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் -
246 : _ _ |a இலம்பையங்கோட்டூர், திருவிலம்பையங்கோட்டூர்
520 : _ _ |a சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவிலுள்ள மேவளூர் குப்பம் எனும் ஊரிலிருந்து வலப்பக்கம் சென்று பேரம்பாக்கம் அடைந்து அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் திருக்கோயில் செல்லும் வழியில் இலம்பையங்கோட்டூர் திருத்தலம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 246 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை மண்டலத்தலங்களில் இது 13-வது தலமாகும். அப்பரும் சம்பந்தரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். மூலவர் தீண்டாத் திருமேனியாக இலிங்க வடிவில் உள்ளார். பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது. மனஇறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தியை வணங்கினால் அதிலிருந்து விடுபடலாம் என்பது தொன் நம்பிக்கை. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்மன் தெற்கு நோக்கியபடி, ஸ்ரீசக்கரபீடத்துடன் அருளுகிறாள்.
653 : _ _ |a சிவன் கோயில், பாடல் பெற்ற தலங்கள், தேவாரத் தலங்கள், தமிழ்நாட்டு சிவாலயங்கள், திருஞானசம்பந்தர்,
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 044 - 27692412, 94448 65714, 96000 43000
905 : _ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
918 : _ _ |a தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை, கதிர் முலையம்மை, கனககுசாம்பிகை
922 : _ _ |a மரமல்லிகை
923 : _ _ |a சந்திர தீர்த்தம், நாகதீர்த்தம், ரம்பா தீர்த்தம், மல்லிகா புஷ்கரிணி, தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்
924 : _ _ |a காமீகம்
925 : _ _ |a ஆறுகால பூசை
926 : _ _ |a குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறைத் திருச்சுற்றின் தென்புற தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கருவறை மேற்குச் சுவரின் தேவகோட்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கில் நான்முகன் மற்றும் தென்புற அர்த்தமண்டப கோட்டத்தில் கணபதி, வடபுற அர்த்தமண்டப கோட்டத்தில் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும், மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. தேவகன்னிகை அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் இலிங்க வடிவில் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
930 : _ _ |a முப்புரமெரிக்க தேரேறிய இறைவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலை குலைந்து சாய்ந்திட மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம் தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. மேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூசித்து, தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று வணங்கினாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் தலங்களை பாடிப்பரவிக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோயில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை. பின்பு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை முட்டிட, சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது. அப்போது தான் இறைவனே பசு உருவில் நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி உணர்த்தியதை சம்பந்தர் அறிந்தார். பின் இத்தலம் வந்த சம்பந்தர் இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார். தனது பதிகத்தின் 3-வது பாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்.
932 : _ _ |a கிழக்கில் ஒரு முகப்பு நுழைவாயிலாக காணப்படுகின்றது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. இக்கோயிலில் கொடிமரம் இல்லை. வெளித்திருச்சுற்றில் இடதுபுறம் தேவகன்னிகை அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் இலிங்க வடிவில் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கனககுசாம்பிகையின் திருமுன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியாக உள்ளது. இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a நரசிம்மபுரம் விஷ்ணு கோயில், திருவிற்கோலம் சிவன் கோயில், பேரம்பாக்கம் கோயில்
935 : _ _ |a திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவன் கோயிலின் தென்மேற்கே 4 கி மீ. தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் தனியார் வாகனங்கள் மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை
937 : _ _ |a எலுமியன்கோட்டூர்
938 : _ _ |a பேரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர்
939 : _ _ |a மீனம்பாக்கம்
940 : _ _ |a ஸ்ரீபெரும்புதூர் வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000318
barcode : TVA_TEM_000318
book category : சைவம்
cover images TVA_TEM_000318/TVA_TEM_000318_எலுமியன்கோட்டூர்_தெய்வநாயகேசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000318/TVA_TEM_000318_எலுமியன்கோட்டூர்_தெய்வநாயகேசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000318/TVA_TEM_000318_எலுமியன்கோட்டூர்_தெய்வநாயகேசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000318/TVA_TEM_000318_எலுமியன்கோட்டூர்_தெய்வநாயகேசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000318/TVA_TEM_000318_எலுமியன்கோட்டூர்_தெய்வநாயகேசுவரர்-கோயில்-0004.jpg